மணமேடையில், மணக்கோலத்தில் மணமகன் மடியில் மயங்கி விழுந்து மணமகள் உயிரிழப்பு.! வெளியான அதிர்ச்சி காரணம்.! - Seithipunal
Seithipunal


ஐதராபாத்தை சேர்ந்த சுஜானா (22 வயது) என்பவருக்கும், விசாகப்பட்டினம் - பி.எம்.பாளையத்தை சேர்ந்த சிவாஜி (வயது 25) என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்திருந்தனர். 

திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, இரவு 10 மணிக்கு முகூர்த்த நேரம் நெருங்கிய உடன், மணமக்கள் பட்டு உடைகள் அணிந்து மணமேடையில் உட்கார வைக்கப்பட்டனர். 

மணமகள் சுஜானா கழுத்தில் மணமகன் சிவாஜி தாலி கட்டுவதற்கு முன்பாக சீரகம் கலந்த வெல்லத்தை மணமகள் சுஜானா தலையில் மணமகன் வைத்தார். அப்போது மணமகள் திடீரென மயங்கி சரிந்து மணமகன் சிவாஜி மடியில் விழுந்தார்.

இதனைக்கண்ட அதிர்ச்சி அடைந்த உறவினர்கள். உடனடியாக மணமகளை மீட்டு அங்கு உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதினார். மணமகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த விசாகப்பட்டினம் போலீசார், மணமகள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் மணமகள் சுஜானா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரிவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணத்தில் விருப்பம் இல்லாததால் தற்கொலை செய்தாரா? இல்லை காதல் தோல்வியால் தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

visakapattinam bride suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->