மகாராஷ்டிரா சட்டசபை - பல்வேறு இடங்களில் வாக்கு எந்திர கோளாறால் மக்கள் அவதி..! - Seithipunal
Seithipunal


288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு மற்றும் பழுது காரணமாக வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

அதாவது, அகோலா மேற்கு சட்டசபை தொகுதியில் உள்ள பி.ஆர். உயர்நிலை பள்ளியில் உள்ள எந்திரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாலேகான் அவுட்டர் சட்டசபை தொகுதியின் பூத் எண் 292ல் உள்ள வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென செயல்படாமல் நின்றதால் பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். 

தொடர்ந்து புல்தானா-ஜல்கான் ஜமோத் தொகுதியில் உள்ள மனஸ்கான் என்ற இடத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சிறிது நேரம் தடைபட்டது. 

மேலும், சத்ரபதி சம்பாஜிநகர் பைதான் தாலுகாவில் உள்ள தாதேகான் புத்ருக்கிலும், கோலாப்பூர் வடக்கு தொகுதியிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் மக்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vote mechines repair in maharastra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->