நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான முன்னோட்டம்! வாக்குப்பதிவு இன்று தொடக்கம்!
Voting for the by elections began today
இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேதியை கடந்த அக்டோபர் 3ம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பில் மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா, தெலுங்கானா, உத்தர பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் காலியாக உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கிழக்கு அந்தேரி தொகுதியும், பீகார் மாநிலத்தில் மோகாம் மற்றும் கோபால்காஞ்ஜி ஆகிய இரு தொகுதிகளுக்கும், ஹரியானா மாநிலத்தில் அடம்பூர் தொகுதிக்கும், தெலுங்கானா மாநிலத்தில் முனுகோட் தொகுதிக்கும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோலோ கோக்ரன்நாத் தொகுதிக்கும், ஒடிசா மாநிலத்தில் தாம்நகர் தனித்தொகுதிக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட அனைத்து தொகுதிகளும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி வேட்பு மனு தாக்கல் கடந்த அக்டோபர் 7ம் தேதி துவங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 14ஆம் தேதி, வேட்பு மனு மீதான பரிசீலனை அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற்றது.
கடந்த அக்டோபர் 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது. இன்று பதிவாகும் வாக்கு நவம்பர் 6ஆம் தேதி எண்ணப்படுகிறது. அதன் முடிவுகள் நவம்பர் 8ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
பாஜக பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கியுள்ளது. எதிர்வரும் பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இந்த இடைத்தேர்தலை பாஜக கருதுகிறது. பாஜக ஆளாத மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல் முடிவை பொருத்து தேர்தல் வீயூகம் வகுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
English Summary
Voting for the by elections began today