தெலுங்கானா: கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து கோரா விபத்து.! தாய் மகள் பரிதாப பலி.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்தனர்.

தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கொமரம் பீம் ஆசிபாபாத், நிர்மல், மஞ்சேரியல், முழுகு, நிஜாமாபாத், மஹர்பூபாபாத், கொத்தகுடெம், வாரங்கள் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

மேலும், கனமழை காரணமாக ஹைதராபாத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஒடிசா-வட ஆந்திர பிரதேச கடற்கரைக்கு அப்பால் வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள சூறாவளி சுழற்சியின் காரணமாக சராசரி கடல் மட்டத்திலிருந்து 7.6 கிலோமீட்டர் வரை நீண்டு தென்மேற்கு நோக்கி நகர்கிறது. இதனிடையே அண்டை மாநிலமான கர்நாடகாவின் 13 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wall collapsed due to heavy rains Telangana Nalkonda


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->