அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் "பிபோர்ஜோய் புயல்"..! 3 மாநிலங்களுக்கு எச்சரிக்கை...! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது புயலானது கோவாவின் மேற்கு திசையில் 690 கிலோ மீட்டர் தூரத்திலும், மும்பையிலிருங்க 640 கிலோ மீட்டர் மேற்கு- தென்மேற்கு திசையிலும், போர்பந்தரில் இருந்து தெற்கு-தென்மேற்கு திசையில் 640 கிலோ மீட்டர் தொலையில் நிலைகொண்டுள்ளது.

இந்நிலையில் பிபோர்ஜோய் புயல் காரணமாக கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அதிகனமழையும், பலத்த காற்றும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரையோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

இதையடுத்து புயலால் கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபல திதால் கடற்கரை முன்எச்சரிக்கை காரணமாக ஜூலை 14-ந்தேதி வரை மூடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Warning for 3 states due to Cyclone biborjoi will intensify in next 24 hours


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->