இட ஒதுக்கீடு விசாரணையை யூடியூபில் நேரலையில் பார்க்கலாம்! - Seithipunal
Seithipunal


நாட்டு மக்கள் தெரிந்து கொள்வது அடிப்படை உரிமை!

உச்ச நீதிமன்றத்தின் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டின் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அரசியல் சாசன அமர்வின் முன் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் வாதங்கள் முடிவுகள் உத்தரவுகளை தெரிந்து கொள்வது நாட்டு மக்களின் அடிப்படை உரிமை என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா தேசிங் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

நேற்று மாலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யுலலித் தலைமையில் நீதிபதிகள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஏக மனதாக உச்சநீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வின் விசாரணைகளை செப்டம்பர் 27ஆம் தேதி முதல் நேரலை செய்வது என முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக யூடியூப் வாயிலாக நேரலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Watch the reservation hearing live on YouTube


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->