தொடரும் வயநாடு சோகம் - பலி எண்ணிக்கை 340 ஆக அதிகரிப்பு..!! - Seithipunal
Seithipunal



கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 340 ஆக உயர்ந்துள்ளது. 

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூன் 29ம் தேதி இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதையடுத்து மறுநாள் (ஜூலை 30) அதிகாலை மாவட்டம் முழுவதும் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் அனைவரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளும் மண்ணில் புதையுண்டு போயின.

நூற்றுக்கணக்கான வீடுகளும், மரங்களும் இந்த நிலச்சரிவில் சிக்கி முற்றிலும் அழிந்துள்ளன. இன்னும் வயநாட்டில் தொடர் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக மீட்பு பணிகளில் சிக்கல் நிலவுகிறது. தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலச்சரிவில் மனிதர்கள், வீடுகள், மரங்கள் மட்டுமின்றி ஏராளமான விலங்குகளும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தொடரும் கனமழை காரணமாக மண்ணில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிவதில் சிக்கல் நீடிப்பதால், தற்போது மண்ணில் புதைந்துள்ளவர்களைக் கண்டறிய தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப் பட்டு வருகிறது. 

இந்த தெர்மல் ஸ்கேனரானது மண்ணில், சேறு மற்றும் சகதிகளில் புதையுண்டுள்ளவர்களையும் எளிதில் கண்டுபிடிக்க உதவும் கருவியாகும். இந்நிலையில் தொடரும் நான்காவது நாள் மீட்புப் பணியில் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 340 ஐ கடந்து இன்னும் அதிகரித்தபடி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wayanad Landslide Death Toll Rises to 340


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->