நாட்டிலேயே பழங்குடியினரின் அடிப்படை ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கிய முதல் மாவட்டம் வயநாடு - ராகுல்காந்தி பெருமை.! - Seithipunal
Seithipunal


நமது அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினரின் அடிப்படை ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் இந்தியாவிலேயே டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் மாவட்டமாக வயநாடு மாவட்டம் மாறிவுள்ளது. 

இந்நிலையில், இந்த டிஜிட்டல் சாதனையை படைத்ததற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது, "சட்டபூர்வமான அதிகாரம் பெற்ற பழங்குடி சமூகமே வலிமையுடைய இந்தியாவின் அடித்தளம் ஆகும். 

நாட்டிலேயே அனைத்து பழங்குடியினருக்கும் அடிப்படை ஆவணங்களை வழங்கியது மட்டுமல்லாமல், அதனை டிஜிட்டல் மயமாக்கியதில் முதல் மாவட்டமாக வயநாடு உள்ளது என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wayanadu district india first for tribals document digitise ragulganthi twitter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->