மதிய உணவு திட்டத்தில் பழமும், கோழி கறியும் சேர்க்க முடிவு..!! எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்..!! - Seithipunal
Seithipunal


கோழிக்கறி அறிவிப்பிற்கு உள்ளாட்சித் தேர்தலே காரணம்..!! எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்...!!

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் கோழிக்கறி மற்றும் பழங்கள் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் "மேற்கு வங்க மாநில அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் அரிசி சோறு, பருப்பு, உருளைக்கிழங்கு, காய்கறி, சோயா பீன்ஸ், முட்டை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அதனுடன் வாரம் ஒரு முறை கோழிக்கறியும், அந்தந்த பருவ காலத்தில் கிடைக்கும் பழ வகைகளையும் வழங்க மேற்குவங்க மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. 

இந்த திட்டத்திற்காக சுமார் 317 கோடி ரூபாய் தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தொடர்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில் பள்ளி கல்வித்துறையின் இத்தகைய அறிவிப்பை எதிர்க்கட்சியில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WBgovt decide chicken curry in the lunch scheme for govt schools


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->