குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ! சிக்கலில் யூடியூபர் இர்ஃபான்!
irfan Baby Delivery
மனைவியின் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை அரங்கில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்ஃபானுக்கு, விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் டாக்டர் ஜெ.ராஜமூர்த்தி தெரிவிக்கையில், "விளம்பர நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது. இது குற்றம்தான்.
எதை ஒளிபரப்ப வேண்டும் என்பதை அறிந்து, சட்டத்திற்கு உட்பட்டு யூடியூபர்கள் செயல்பட வேண்டும். மக்களுக்கு நல்லது சொல்ல எவ்வளவோ இருக்கு.. அதையெல்லாம் செய்யலாம்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தொப்புள்கொடியை வெட்டுவதை போன்று வீடியோ: இர்ஃபான் வெளியிட்ட வீடியோவை நீக்கக்கோரி யூடியூப் நிறுவனத்திற்கு மருத்துவத்துறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.