செப்டம்பர் மாதத்தை, ஊட்டச்சத்து குறைபாடுக்கு எதிரான மாதமாக அனுசரிக்க உள்ளோம் - பிரதமர் மோடி பேச்சு..! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி ''டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம், குக்கிராமங்களிலும் இணைய வசதி கிடைத்துள்ளது; இந்த இணைய வசதி, மக்களிடையேயான தொடர்பை மேம்படுத்துவதுடன், டிஜிட்டல் தொழில் முனைவோரையும் அதிகரித்து வருகிறது,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 'மன் கீ பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலமாக, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில்,  நாட்டு மக்களிடையே  உரையாற்றி வருகிறார். இந்த மாதத்திற்கான நிகழ்ச்சியில், நேற்று அவர் பேசியதாவது:

நாம் அனைவரும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடியுள்ளோம். தேசியக் கொடியை ஏற்றுவது என்ற பெருமைமிக்க நிகழ்வில், நாட்டு மக்கள் அனைவரும், சுயமாகவும், ஆர்வத்துடனும், பெருமிதத்துடனும் பங்கேற்றனர்.இந்துாரில், மக்கள் மனித சங்கிலி அமைத்து, நம் நாட்டின் வரைபடத்தை உருவாக்கினர். சண்டிகரில், இளைஞர்கள் இணைந்து மூவர்ணக் கொடியை உருவாக்கினர். இந்த இரண்டு நிகழ்வும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.நமது நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நம் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில், 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 தேசப்பற்று பாடல்களை பாடி அசத்தினர். ஹிந்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் என, பல மொழிகளில் இந்தப் பாடல்கள் பாடப்பட்டன.நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும், 75 நீர் நிலைகளை புனரமைக்கும் திட்டத்தை துவக்கினோம். இதில், மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். இது நமக்கு மட்டுமல்ல; நம் எதிர்கால சந்ததியினருக்கும் பலன் அளிக்கக் கூடியதாக அமைகிறது.

இந்த சுதந்திர தினத்தின் போது, வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் ஜோர்சிங் கிராமத்தில், '4ஜி' இணைய சேவை கிடைத்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், இதுபோன்ற மிகச் சிறிய குக்கிராமங்களிலும் இணைய வசதி கிடைத்துள்ளது.

இது, மக்களிடையே தொடர்பை ஏற்படுத்துவதுடன், டிஜிட்டல் தொழில் முனைவோரையும் அதிகரிக்க செய்யும். வரும் செப்டம்பர் மாதம், சாதாரணமான மாதமல்ல. செப்டம்பர் மாதத்தை, ஊட்டச்சத்து குறைபாடுக்கு எதிரான மாதமாக அனுசரிக்க உள்ளோம். இதற்காக, ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளன என்று பிரதமர் மோடி  வானொலி நிகழ்ச்சி மூலம் நாடு மக்களிடம் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

We are going to observe the month of September as the month against malnutrition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->