பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய அதிரடி தடை! அந்த வார்த்தை தான் காரணமா?! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநில பாஜக வேட்பாளரும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான அபிஜீத் கங்கோபாத்யாய தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வரும் நிலையில், தற்போதுவரை 5 கட்ட தேர்தல் வாக்கு பதிவு முடிவடைந்துள்ளது. இன்னும் இருக்கட்ட தேர்தல் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்குவங்கம் தம்லுக் தொகுதி பாஜக வேட்பாளர் அபிஜீத் கடந்த 15-ஆம் தேதி பிரசார கூட்டத்தில் மேற்கு வாங்க மாநில முதல்வர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரின் பிரச்சார உரையில்,  "நீங்கள் எவ்வளவு விலைக்கு விற்பனையாகிறீர்கள் மம்தா? உங்கள் விலை 10 லட்சமா? நீங்கள் ஒரு பெண் தானா? என்று சில நேரங்களில் நான் ஆச்சரியப்படுகிறேன்” என்று தரகுறைவாக அபிஜீத் பேசியிருந்தார்.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் அபிஜீத்திடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பெண்கள் குறித்து கீழ்த்தரமான கருத்தை பேசியதற்காக இன்று மாலை 5 மணிமுதல் 24 மணிநேரத்துக்கு அபிஜீத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிப்பதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இப்படியான அருவருப்பான வார்த்தைகளை கல்வி மற்றும் நீதித்துறை பின்னணியில் இருந்து வந்த பாஜக வேட்பாளர் அபிஜீத் பேசியது வேதனை அளிப்பதாகவும் தேர்தல் ஆணையம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மே 25-ஆம் தேதி அபிஜீத் போட்டியிடும் தம்லுக் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அவரின் இந்த பேச்சு அவருக்கான வெற்றி வாய்ப்பை குறைந்துள்ளதாக அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bangal BJP MP Candidate issue Election commission action


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->