வலுக்கும் நீட் எதிர்ப்பு! மேற்கு வங்கத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்!
West Bengal also decided against NEET exam
தமிழ்நாட்டைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பாக நீட் வினாத்தாள் கசிவு நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் 67 மாணவர்கள் 720க்கு 720 பெற்றதும் அரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 7 பேர் முழுமதிப்பெண் பெற்றதும் நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியது.
நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐக்கு மாற்றப்பட்டு சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். வினாத்தாள் காசி சம்பந்தமாக பல்வேறு நபரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை நீட் தேர்வுக்கு எதிராக சமீபத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க கோரி மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்ட்டது.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் தேர்வுக்கு முன்பாக மேற்கு வங்கத்தின் பல்வேறு நகரங்களில் மாநில அரசு நடத்திய போது நுழைவு தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
English Summary
West Bengal also decided against NEET exam