மேற்கு வங்கம் || பொட்டலத்தில் வீசப்பட்ட வெடிகுண்டு.! பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.!
west bengal bomb broke children died in railway station
மேற்கு வங்க மாநிலத்தில் பட்பரா பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் காயமடைந்தனர்.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்த பெண் மற்றும் குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அங்கு விசாரணை செய்தபோது, வெடிக்காத நிலையில் கிடந்த இன்னொரு குண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று காலை 8.30 மணியளவில் கொல்கத்தாவிலிருந்து 30 கி.மீ தொலைவில், காக்கினாரா மற்றும் ஜகத்தால் ரெயில்வே நிலையங்களுக்கு இடையே, ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த ஒரு பொட்டலத்தை சிறுவன் ஒருவன் கையிலெடுத்து தனது நண்பர்கள் இருவருடன் அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அந்த பொட்டலத்தில் இருந்த குண்டு திடீரென வெடித்தது. சில சமூக விரோதிகள், ரெயில்வே தண்டவாளத்தை தகர்ப்பதற்கு அங்கு குண்டு வைத்து விட்டு சென்றுள்ளனர். ஆனால் அந்த சிறுவன் அதை வெடிகுண்டு என்று அறியாமல் எடுத்துக்கொண்டு வந்ததால் பரிதாபமாக உயிரிழந்தான்.
அவனுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் பலத்தக் காயமடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
English Summary
west bengal bomb broke children died in railway station