அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியுடன் மம்தா திடீர் சந்திப்பு - காரணம் என்ன?
west bengal cm mamta banarji meet sunitha kejriwal
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கெஜ்ரிவாலை கைது செய்தனர்.
தற்போது, கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லியில் உள்ள அரவிந்த கெஜ்ரிவால் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.
முதலமைச்சர் மம்தா பானர்ஜியை அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் வரவேற்றார். அப்போது ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடனிருந்தார். இதற்கு முன்னதாக 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் 'நிதி ஆயோக்' கூட்டத்தை புறக்கணித்த நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மம்தா பானர்ஜி டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
west bengal cm mamta banarji meet sunitha kejriwal