மேற்கு வங்க ரயில் விபத்து: திடீரென ரத்து செய்யப்பட்ட 19 ரயில்கள்! பொதுமக்கள் அவதி.!
West Bengal train accident 19 trains canceled
மேற்கு வங்கம், டார்ஜிலிங் பகுதியில் விரைவு ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி இன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மீட்பு குழுவினர் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நியூ ஜல்பைகுரி, சிலிகுரி சந்திப்பு, பாக்டோக்ரா, அளுவாபுரியா வழியாக செல்லக்கூடிய 19 ரயில்கள், விபத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என வடகிழக்கு எல்லை புர ரயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது.
English Summary
West Bengal train accident 19 trains canceled