வாஞ்சூர் கடற்கரையில் 80 அடி நீளம் கொண்ட திமிங்கலம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


வாஞ்சூர் கடற்கரையில் 80 அடி நீளம் கொண்ட திமிங்கலம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு.!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலை அடுத்த வாஞ்சூர் பகுதியில் தனியார் துறைமுகம் ஒன்று உள்ளது. இந்த துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில்,
நேற்று சுமார் 80 அடி நீளம் உள்ள நீல திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. 

இதைப்பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து துறைமுக ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து திமிங்கலத்தை பார்வையிட்டு இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர். 

அந்த தகவலின் படி, மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் மீன் வளத் துறையினர் வாஞ்சூர் கடற்கரைக்கு வந்து திமிங்கலத்தைப் பார்த்தனர். அதன் பின்னர் அவர்கள் அந்த திமிங்கலத்தை கடலில் விடுவதற்கு முடிவு செய்தனர்.

அதன் படி அவர்கள் காரைக்காலை சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட மீனவர்களின் உதவியுடன் ஐந்து மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, அந்த திமிங்கலத்தை பத்திரமாக மீட்டு, கயிற்றில் கட்டி இழுத்துச் சென்று நடுக்கடலில் விட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whale washed ashore in vanjur sea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->