காஷ்மீர் உதம்பூரில் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒயிட் நைட் கார்ப்ஸ் படைவீரர் வீர மரணம்...! - Seithipunal
Seithipunal


காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்திலுள்ள துடு-பசந்த்கர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

சற்றும் தாமதிக்காமல் உடனே அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினர் மீது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.இதையடுத்து பசந்த்ஃகர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை தேடியபோது துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த ஒயிட் நைட் கார்ப்ஸ் படை வீரர் வீர மரணமடைந்தார்.இது சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

White Knight Corps soldier martyred firing Kashmir Udhampur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->