டெல்லியின் முதலமைச்சராகும் பெண் தலைவர்! பரபரப்பு தகவல்!
Who is next Delhi CM Atishi AAP Arvind Kejriwal
கல்வித்துறை அமைச்சராக உள்ள அதிஷி டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்படவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், கட்சியின் முக்கிய பொறுப்புக்களை நேரடியாக கையாண்ட அதிஷியை டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில மணிநேரங்களில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கினாலும், முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது, எந்தவித கோப்புகளிலும் கையெழுத்திடக்கூடாது என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை இன்னும் இரண்டு தினங்களில் ராஜினாமா செய்ய உள்ளதாக நேற்று அறிவித்திருந்தார்.
டெல்லி டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து முடிவு எட்டப்பட உள்ளதாகவும், அதன் பிறகு டெல்லி துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் சமர்ப்பிக்க உள்ளார் என்றும் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Who is next Delhi CM Atishi AAP Arvind Kejriwal