கணவனை கொலை செய்த மனைவி.. காவல்துறை விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..! - Seithipunal
Seithipunal


கணவனை கொலை செய்து மனைவி நாடகமாடியது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் வசித்து வருபவர் சாந்தனு கிருஷ்ண சேஷாத்ரி. திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில், சாந்தனு கொலை செய்து கொண்டதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது தகவலறிந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரின் தற்கொலை குறித்து அவரது மகன் மற்றும் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும்,அவர்கள் வீட்டில் நடத்திய சோதனையில் சாந்தனுவின் ரத்தக்கறை படிந்த உடை ஒன்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவரின் மகன் மற்றும் மனைவியிடம் குறுக்கு விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சாந்தனுவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். அவர்கள் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சாந்தனுவிற்கும் அவரது மனைவி மற்றும் மகனுக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல மூவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அவரது மனைவி மற்றும் மகன் அதிகாலை 4 மணி அளவில் அவரின் தலையில் கட்டையால் பலமாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் பயந்து போன அவரது மனைவி ஜெஷீலா மற்றும் மகன் அரவிந்த் உடலை ஏழாவது மாடியில் இருந்து தூக்கி வீசி தற்கொலை போல் காட்டுவதற்கு முயற்சித்துள்ளனர். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife Kills His Husband In Mumbai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->