குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடததால்.. மனைவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கனகாபுரா ரோடு கிரிகவுடன தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகண்டா. இவரது மனைவி தேஜஸ்வினி. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் தேஜஸ்வினி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கடந்த 6-ம் தேதி இந்த தம்பதியின் ஆண் குழந்தைக்கு 2-வது பிறந்தநாள் விழாவாகும். தனது மகனின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று கணவரிடம் தேஜஸ்வினி கூறியுள்ளார்.

ஆனால் கோழி பண்ணை வைத்து நடத்தியதில் கணவருக்கு நஷ்டம் ஏற்பட்டு இருந்ததால், அவருக்கு குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட விருப்பமில்லாமல் மைசூருக்கு வேலையாக சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த தேஜஸ்வினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பெங்களூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife suicide because son birthday not celebrate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->