மின்சார ரயில்கள் இனி ஓடாதா?....இதோ முழு விவரம்! - Seithipunal
Seithipunal


சென்னை சென்ட்ரல்-திருத்தணி இடையே பகுதி நேரமாக மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், அரக்கோணம் பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாளை மற்றும் வரும் 24-ம் தேதி காலை 9.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும்  மின்சார ரெயில், பகுதிநேரமாக திருவள்ளூர்-அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதே நாட்களில்  காலை 11.15 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் மின்சார ரெயில் அரக்கோணம்-திருவள்ளூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டிரலில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில், பகுதிநேரமாக திருவள்ளூர்-திருத்தணி இடையே ரத்து செய்யப்படுகிறது.

மேலும் திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயில், பகுதிநேரமாக திருத்தணி-திருவள்ளூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.சென்னை சென்டிரலில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் திருப்பதி செல்லும் மின்சார ரெயில், சென்னை சென்டிரல்-திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

அதே போல, வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும்  மின்சார ரெயில், சித்தேரி-அரக்கோணம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will electric trains no longer run here is the full details


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->