மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா டெஸ்மா சட்டம் பாயுமா? பதில் அளிக்காமல் சென்ற ஆளுநர்! - Seithipunal
Seithipunal


மூன்றாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்! சாலை மறியலில் ஈடுபடும் பொதுமக்கள்!

புதுவை மின் துறையை தனியார் மயமாக்கும் டென்டரை வெளியிட்டது புதுச்சேரி அரசு. இதனை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுவை, காரைக்கால், மாகி ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் ஊழியர்கள் வேலைக்கு ஈடுபட்டு வருவதால் மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுவை வம்பாகீரப்பாளையம் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தத்தினால் புதுவை நகரம் புறநகர் மற்றும் கிராம பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோரிமேடு காலாப்பட்டு கட்டஞ்சாவடி மற்றும் சுற்றுவட்டார மக்கள் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உடன் மாநில முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.

இன்று காலை 10:45 மணிக்கு ஆளுநர் மாளிகை வந்த ரங்கசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் அவுட்சோர்சிங் முறையில் மின் துறை பணியாளர்களை நியமிப்பது மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர் பணிக்கு அழைத்து பிரச்சினைக்கு தீர்வு காண ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனை செய்யும் போது தலைமைச் செயலாளர் ராஜீவ்வர்மா, ஆளுநரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, மின்துறைச் செயலாளர் அருண் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் "மக்களுக்கு எதிராகவும் மின்துறை ஊழியர்களுக்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் புதுவையில் இருக்காது. விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து மக்களுக்கு நல்லது என்பதற்காக மட்டுமே தனியார் மயமாக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்ய வேண்டாம் என்பதை எனது வேண்டுகோள். மக்களுக்கான மின்சாரத்தில் தடை ஏற்படுவது நல்லது அல்ல. குழந்தைகள் படிக்கிறார்கள், மங்கல் நிகழ்ச்சிகள் வீடுகளில் நடைபெறும்.

சுயநலத்திற்காக மின்தடை ஏற்படுத்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். மின்துறை ஊழியர்களும் அதிகாரிகளும் எந்த விதத்திலும் பாதிப்படைய மாட்டார்கள். சட்டபூர்வமாக அவர்களுக்கு எவ்வாறு உதவி செய்ய முடியும் என்பது குறித்து தான் நாங்கள் விவாதித்தோம். இது ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பு. மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை நடத்தக்கூடாது. மக்கள் எந்த விதத்திலும் பாதிக்க கூடாது" என கூறினார்.

பின்னர் செய்தியாளர் ஒருவர் போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மீது எஸ்மா எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்டதற்கு பதில் ஏதும் கூறாமல் நழுவி சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will ESMA DESMA act on power sector employees The governor did not respond


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->