குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல்காந்தி கலந்துகொள்ளாததற்கு காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும்.

ஆனால், இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் நடைபெறுவதால் குளிர்கால கூட்டத்தொட்ரை டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி,  நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் 7-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி கலந்துகொள்ள மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 

இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்ததாவது, "ராகுல்காந்தி குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ என்ற ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கலந்துகொள்ள மாட்டார்" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Winter Session of Parliament ragulganthi not participate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->