சுட்டெரிக்கும் வெயிலால் இருசக்கர வாகனத்தில் குளித்தபடி சென்ற பெண் - வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சுட்டெரிக்கும் வெயிலால் இருசக்கர வாகனத்தில் குளித்தபடி சென்ற பெண் - வைரலாகும் வீடியோ.!

தற்போது நாடு முழுவதும் கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதில் இருந்து தப்பிப்பதற்கு மக்கள் பல்வேறு வழிகளை யோசித்து அதனை செய்து வருகின்றனர். 

அந்த வகையில், இந்தக் கோடை வெப்பத்தை பயன்படுத்தி பிரபலமடைய வேண்டும் என்று ஒரு சிலர் இருசக்கர வாகனத்தில் குளித்துக்கொண்டே செள்கின்றனர். அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் உல்ஹஸ் நகரில் உள்ள சிக்னலில் ஸ்கூட்டரில் வந்த ஆண் மற்றும் பெண் நடுரோட்டில் குளித்தவாறு பயணம் செய்தனர். இருவரும் ஸ்கூட்டரில் இருந்துகொண்டே தண்ணீரை தலையில் ஊற்றி குளித்துக்கொண்டு சென்றனர்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வைரலானதை அடுத்து போக்குவரத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். ஸ்கூட்டரின் பதிவு எண்ணை அடிப்படையாக கொண்டு அதன் உரிமையாளர் மீது அபாராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman bathing on scooter at mid way in maharastra vedio vairal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->