பிரசவ அறையான அரசு பேருந்து - ஓட்டுனருக்கு குவிந்த பாராட்டுக்கள்.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம் திருச்சூர் அருகே மலப்புரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பெண் ஒருவர் தனது கணவருடன் திருச்சூரில் இருந்து கோழிக்கோடு தொட்டில்பாலம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நடு வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

இதையறிந்த அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துவிட்டு விரைவாக ஓட்டிச் சென்றார். ஆனால், அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்ததால், பேருந்து வழியிலேயே நிறுத்தப்பட்டது.

இதையடுத்து பேருந்து இருக்கும் இடத்திற்கு வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் பேருந்துக்குள் சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்தப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 

இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்ட தாய் மற்றும் சேய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பலரும், அரசு பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தையும், மருத்துவர்கள், செவிலியர்களின் பணியையும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman born baby in govt bus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->