உங்கள் வீட்டுப் பெண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லாதீங்க - இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் நறுக்!
woman doctor murder Suryakumar Yadav Cricket
கடந்த ஒன்பதாம் தேதி கொல்கத்தாவின் புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரியில், 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு முன்னெடுத்துள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 88 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், இது ஒரு மணி நேரத்திற்கு நாலு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதற்கு உண்டான சராசரி என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரின் அந்த பதிவில், உங்கள் வீட்டுப் பெண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதை நிறுத்துங்கள். மாறாக உங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க சொல்லிக் கொடுங்கள்.
உங்கள் அப்பாவுக்கு சொல்லிக் கொடுங்கள்,
உங்கள் அண்ணனுக்கு சொல்லிக் கொடுங்கள்,
உங்கள் கணவனுக்கு சொல்லிக் கொடுங்கள்,
உங்கள் நண்பனுக்கு சொல்லிக் கொடுங்கள் "பெண்களை எப்படி மதிக்க வேண்டும்" என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவை பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து, தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
woman doctor murder Suryakumar Yadav Cricket