ராட்டினத்தில் சிக்கிய பெண்ணின் தலைமுடி - சரமாரியாக கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


ராட்டினத்தில் சிக்கிய பெண்ணின் தலைமுடி - சரமாரியாக கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்.!

குஜராத் மாநிலத்தில் ஒரு பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர். அங்கு ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் பலரும் ஏறி விளையாடியுள்ளனர். 

அப்போது, பெண் ஒருவரின் தலைமுடி எதிர்பாராதவிதமாக ராட்டினத்தில் சிக்கிக் கொண்டது. இதில், வலி தாங்க முடியாமல் அவர் கதறி அழுதுள்ளார். இதைப்பார்த்த உடனே ராட்டினம் நிறுத்தப்பட்டு, திருவிழாவிற்கு வந்திருந்த மக்கள், பெண்ணின் தலைமுடியை ராட்டினத்தில் இருந்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், அவரது தலையில் பலத்தைக் காயம் ஏற்பட்டு இருந்தது. அதன் பின்னர், அந்த பெண்ணின் தலைமுடியை வெட்டி மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை திருவிழாவிற்கு வந்திருந்த சிலர் வீடியோ எடுத்தனர். இதைப்பார்க்கும் நெட்டிசன்கள் இதுபோன்ற சம்பவம் நடக்க யார் காரணம்? மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman hair got caught giant wheel in gujarat temple festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->