மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை எதிர்க்கிறோம் - இஸ்லாமிய கட்சி தலைவர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் டெல்லியில் நேற்று தொடங்கியது. இன்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடைகொடுத்து, புதிய நாடளுமன்றத்தில் மக்களவை தொடங்கியது.

இதற்கிடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட வேண்டிய முக்கிய சட்ட முன்வரைவுகள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டு சட்ட முன்வரைவை கொண்டு வந்து நிறைவேற்ற  தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. 

2010-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன்பின் கடந்த 13 ஆண்டுகளில் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு இன்று மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவையில் இச்சட்டம் ஒருமணக்க நிறைவேற்றப்பட்டு, விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவிக்கையில், "இந்த மசோதா மூலம் யாருக்கு பிரதிநிதித்துவம் தருகிறீர்கள்? 

உண்மையில் பிரதிநிதித்துவம் இல்லாதவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். 

இந்த மசோதாவில் உள்ள பெரிய குறைபாடு முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்பதுதான். 

எனவே இந்த மசோதாவை இஸ்லாமிய பெண்களும், நாங்களும் எதிர்க்கிறோம்" என்று அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Reservation bill Owaisi oppose


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->