கணவருக்கு வீடியோ கால் செய்துவிட்டு குழந்தையுடன் தற்கொலை செய்த தாய் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, லத்தூர் மாவட்டம், மாலேகானை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ. ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் இவர் தனது மகனையும், மகளையும் சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்க விரும்பினார். ஆனால், சிபிஎஸ்இ பள்ளியில் குழந்தைகளை படிக்க வைக்கும் அளவுக்கு குடும்ப வருமானம் போதுமானதாக இல்லை. 

இதனால், பாக்யஸ்ரீ அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார். இந்த நிலையில், அவர் தனது மகளுடன் கிணற்று பகுதிக்குச் சென்று அங்கிருந்து தனது கணவர் வெங்கட் ஹல்சேவுக்கு வீடியோ கால் செய்து, மகள் சமிக்சாவின் முகத்தை கடைசியாக பார்க்குமாறு கூறிவிட்டு, குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு அவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வெங்கட் ஹல்சே சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதி மக்கள் உதவியுடன் பாக்யஸ்ரீ மற்றும் இரண்டு குழந்தைகளையும் மீட்டனர். அதில், பாக்யஸ்ரீ மற்றும் அவரது மகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், அவரது மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman sucide with childrens in maharastra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->