இந்திய கொடியை கன்னத்தில் வரைந்து சென்ற பெண்ணுக்கு பொற்கோவிலில் அனுமதி மறுப்பு.! - Seithipunal
Seithipunal


இந்திய கோடியை கன்னத்தில் வரைந்து சென்ற பெண்ணுக்கு பொற்கோவிலில் அனுமதி மறுப்பு.!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் சீக்கியர்களின் வழிபாட்டு தலமான பொற்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு பெண் ஒருவர் இந்திய தேசியக் கொடியை போன்று மூவர்ணத்தை கன்னத்தில் வரைந்து சென்றுள்ளார். இதனால், அவர் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அதில் "பொற்கோவில் பாதுகாவலர், அந்த பெண்ணை உள்ளே செல்லக்கூடாது என்று தடுத்து நிறுத்துகிறார். அதற்கு அந்த பெண், இது இந்தியா இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு காவலர் 'இது பஞ்சாப்' என்று பதிலளித்துள்ளார்.

மீண்டும் மீண்டும் அந்த பெண் இது இந்தியா இல்லையா? என்று கேட்டதற்கு, அவர் இல்லை என்றே தலையசைக்கிறார். இதனை அந்தப் பெண் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இதைபார்த்த காவலர் பெண்ணின் செல்போனை பறிக்க முயற்சி செய்வது அந்த வீடியோவில் உள்ளது.

இதையடுத்து அந்த அதிகாரியின் செயலுக்கு கோவில் நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், அந்த பெண்ணின் முகத்தில் வரைந்திருந்த சின்னத்தில் அசோக சக்கரம் இல்லாததால் அது இந்திய கொடி அல்ல, அரசியல் கொடி என்று நினைத்து இவ்வாறு நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman turned away from golden temple for indian flag painted on face


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->