''பெண்கள் ஒரேயொரு கொலை செய்தால் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்'' ஜனாதிபதியிடம் பரபரப்பு கோரிக்கை..!
Women deserve legal immunity for one murder says NCP (SP) leader in letter to President
இன்று நாட்டில் பெண்கள் பெரும்பாலும் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர். இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மார்ச் 08 சர்வதேச மக்களில் தினம் கொண்டாடப்பட்டது. இந்த மகாலிற் தினத்தை முன்னிட்டு, குடியரசு தலைவருக்கு பரபரப்பு கோரிக்கை ஒன்று கடிதம் மூலம் கிடைத்துள்ளது.
அதாவது, பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடும் மனநிலையைக் களைய பெண்கள், ஒரேயொரு கொலை செய்தால், மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று அந்த கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை கடிதம் மூலம் மகாராஷ்டிராவின் சரத் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த பெண் தலைவர் ரோஹிணி கட்ஸே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ரோஹிணி கட்ஸே அவரது கடிதத்தில் கூறியதாவது, ''இந்த நாடு புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் நாடாகக் கருதப்படுகிறது. அமைதி மற்றும் அகிம்சையின் சிறந்த சின்னமாக இருக்கும் பூமி, இப்போது மன்னிப்பை எதிர்பார்த்து கோரிக்கை வைக்கிறது.

இன்று நாட்டில் பெண்கள் பெரும்பாலும் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர். இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 2 நாட்களுக்கு முன்பு, மும்பையில் 12 வயது சிறுமி ஒருத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள். நிலைமை எப்படி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்?
உலக மக்கள்தொகை சீரமைப்பு கணக்கெடுப்பு முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை கொண்ட பல்வேறு நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த கணக்கெடுப்பின்படி, ஆசியாவிலேயே இந்தியா உலகின் மிகவும் பாதுகாப்பற்ற நாடாக மாறியுள்ளது. இதில் பெண்கள் கடத்தல், குடும்ப வன்முறை குற்றங்கள் மற்றும் பிற தீவிர குற்றச் செயல்கள் ஆகியவை அடங்கும். எனவே, அனைத்து பெண்கள் சார்பாக ஒரேயொரு குற்றத்துக்காக எங்களை மன்னிக்க கோருகிறோம்.

பெண்களுக்கு எதிரான அடக்குமுறை மனநிலை, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டுமென்ற மனநிலையை, செயலற்று கிடக்கும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றைக் கொல்ல நாங்கள் விழைகிறோம். இன்னலுற்ற நமது தேசத்தை காக்க மகாராணி, தாராராணி, புண்யஷ்லோக் அஹில்யாதேவி வாளை எடுத்துக்கொண்டு, நம் சமூகத்தை சீர்திருத்த
நம்மிடம் கேட்கிறாள்.
எங்கள் கோரிக்கையை ஏற்று அதற்கு அனுமதியளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். சர்வதேச மகளிர் நாளான இன்று , இதையே உங்களிடமிருந்து கிடைக்கும் பரிசாக நாங்கள் ஏற்றுக்கொள்வோம்'' என்று பரபரப்பான கோரிக்கை முன் வைத்துள்ளார்.
English Summary
Women deserve legal immunity for one murder says NCP (SP) leader in letter to President