பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு; பஞ்சாப் நபரிடமிருந்து 05 துப்பாக்கிகள் பறிமுதல்..!
Link with Pakistani drug trafficking gang 05 guns seized from a Punjab person
பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் தரண் சாகிப் மாவட்டம் நவ்ஷிரா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த போதைப்பொருள் கடத்த கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக மாநில உளவு பிரிவுக்கு ரகசிய தகவல் ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் ஜோக்பீர் சிங் என்பவரை உளவு பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது உறுதியாகியுள்ளது.
அத்துடன், ஜோக்பீர் சிங்கிடமிருந்து 05 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கிகள் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜோக்பீர் சிங்கிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Link with Pakistani drug trafficking gang 05 guns seized from a Punjab person