பிரசவத்தின் போது பெண் மருத்துவர் உயிரிழப்பு - கேரளாவில் சோகம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டம் அரூர் அருகே சந்திரூர் பகுதியை சேர்ந்தவர்கள் கபீர்-ஷீஜா தம்பதியினர். இவர்களது மகள் பாத்திமா. மருத்துவரான இவர் திருச்சூரில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எம்.டி. படித்து வந்தார். 

இந்த நிலையில் பாத்திமா 2-வது பிரசவத்திற்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு பிரசவம் நடந்த போது, திடீரென உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. 

இதனால் மருத்துவர்கள் பாத்திமாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆனால், பிறந்த குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து எர்ணாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசவத்தின் போது பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women doctor died delivery in kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->