ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை - கங்கை நதியில் மாயமான இளம்பெண்..!!
women missing in gangai river for taking reels
இந்தக் காலகட்டத்தில் பொதுமக்கள் சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காக ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து வருகின்றனர். அப்படி ரீலிஸ் எடுக்கும்போது சில அசம்பாவிதங்களும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், கங்கை நதியில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 15 ஆம் தேதி பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் உத்தரகாண்டில் உள்ள உத்தரகாஷிக்குச் சென்றிருந்தார்.

அப்போது மணிகர்ணிகா காட் அருகே கங்கை நதியில் இறங்கி அந்தப் பெண் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த பெண் கங்கை நதியில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
அந்த ரீல்ஸ் வீடியோவில், "இளம் பெண் அடித்து செல்லப்படுகையில், அவரின் குழந்தை தனது தாயை, 'அம்மா! அம்மா!" என்று கூப்பிடுவது" பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் பெண்ணின் உடலை தீவிரமாக தேடி வந்துள்ளனர். ஆனால் அந்தப் பெண்ணின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
English Summary
women missing in gangai river for taking reels