நாகாலாந்து தேர்தல்: மது வினியோகத்தை தடுக்க 100 சோதனை சாவடி அமைத்த பெண்கள் குழு.! - Seithipunal
Seithipunal


நாகலாந்து மாநிலத்தில் வருகின்ற 27ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இலவசமாக வாக்காளர்களுக்கு மதுபானங்கள் வழங்க வெளிமாநிலங்களில் இருந்து மது கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இந்நிலையில் மது கடத்தலை தடுப்பதற்காக நாகலாந்து பெண்கள் களத்தில் இறங்கி சாக்கிசங் மதர்ஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு மூலம், பல்வேறு மாவட்டங்களில் 100 சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சாக்கிசங் மதர்ஸ் அசோசியேஷன் தலைவர் தெரிவித்ததாவது, தேர்தல் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தியும் வந்து இலவசமாக வாக்காளர்களுக்கு அளிக்கின்றனர். இதனால் குடும்பங்களில் பிரச்சினை ஏற்படுவதால் எங்கள் அமைப்பு மூலம் முக்கிய பகுதிகளில் 100 சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளோம்.

இந்த சோதனைச் சாவடியில் 24 மணி நேரமும் ஷிப்ட் அடிப்படையில் எங்கள் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சுமார் 80 கிராமங்களை சேர்ந்த பெண்கள் சோதனை சாவடிகளிலும், வாகனங்களில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மதுபானங்களை பறிமுதல் செய்து காவல்துறையிடம் ஒப்படைக்கிறோம் என்றும், பொதுமக்களும் பல்வேறு தொண்டு அமைப்புகளும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 1989ஆம் ஆண்டு நாகலாந்தில் மது விற்பனைக்கு முழு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women set up 100 checkpoints to prevent liquor distribution in Nagaland elections


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->