டெல்லி மெட்ரோ ரெயிலில் பஜனை பாடிய பெண்கள் - அதிகாரியிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம்.!!
womens pajanai in delhi metro train
தலைநகர் டெல்லியின் மெட்ரோ ரெயிலில் பெண்கள் சிலர் பஜனை பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மெட்ரோ ரெயிலில் கூட்டம் நிறைந்த இடத்தில் பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து வந்த சில பெண்கள் டோலக், கர்த்தாள் போன்ற இசைக்கருவிகளை இசைத்து சத்தமாக பஜனை பாடினர்.

இதனை ரெயிலில் பயணிக்கும் பொதுமக்கள் கண்டுகொள்ளாதது போல் தங்களது செல்போனை பார்த்துக்கொண்டே வந்தனர். அப்போது அந்தப் பெட்டிக்குள் நுழைந்த ரெயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்தப் பெண்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்தார்.
இதையடுத்து பெண்கள் பஜனை பாடுவதை நிறுத்திவிட்டு அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இந்த வீடியோவிற்கு பயனர்கள், இது போன்ற பொது இடங்களில் ஆன்மீக நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்றும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் அவர்கள் பொது இடங்களில் தகாத முறையில் நடந்து கொள்ளாமல் வெறும் பஜனை பாட்டு தான் பாடியுள்ளார்கள் என்று ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
English Summary
womens pajanai in delhi metro train