2½ வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு.! தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் 2½ வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கேரளா கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சுனில்(47). கடந்த 2016ஆம் ஆண்டு இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஒரு தம்பதியின் 2½ வயது பெண் குழந்தைக்கு திடீரென உடலில் காயங்கள் காணப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், 2½ வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது பக்கத்து வீட்டை சேர்ந்து தொழிலாளி சுனில் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் சுனிலை கைது செய்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கு தளிபரம்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து சுனிலுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker gets double life sentence for sexually harassing child in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->