மல்யுத்த வீராங்கனைகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் - பாஜக எம்.பி மேனகா காந்தி
Wrestlers justice confirm BJP Menaka Ghandhi
தேசிய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று பாஜக எம்பி மேனகா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேசிய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சிங் தங்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ள மல்யுத்த வீரனனைகள் அவரை கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் இந்தப் போராட்டத்திற்கு அரசு கவனம் செலுத்தாததால் வீராங்கனைகள் வென்று குவித்த பதக்கங்களை கங்கையில் வீசுவதாக அறிவித்து மல்யுத்த வீரர்களின் ஹரித்வார் சென்றனர்.
அங்கு விரைந்த விவசாய அமைப்பினர் மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பதக்கங்களை வீச வேண்டாம் என வலியுறுத்தினர். மேலும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு விவசாய அமைப்பு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
விவசாய அமைப்பின் கோரிக்கை ஏற்று பதக்கங்களை வீசும் போராட்டத்தை மகிழ்வித்து வீராங்கனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். மேலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க 5 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளனர்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து பிரிஜ் பூஷன் சிங்கருக்கு எதிராக இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர். மேலும் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் பிரிஜ் பூஷன் சிங் தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கவும் தயார் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக எம்.பி மேனகா காந்தி, மல்யுத்த வீராங்கனைகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Wrestlers justice confirm BJP Menaka Ghandhi