யாத்திரையின் போது தாயை தோளில் சுமந்து சென்ற வாலிபர்! லைக்குகளை அள்ளும் வீடியோ! - Seithipunal
Seithipunal


கன்வார் யாத்திரையின் போது இளைஞர் தனது தாயை தோளில் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது:

வட மாநிலங்களில் ஆண்டு தோறும் ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் இறுதி வரை கன்வார் யாத்திரை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. 

இந்த ஆண்டும் வழக்கம் போல் கடந்த 4-ந்தேதி கன்வார் யாத்திரை தொடங்கி உள்ளது. இந்த யாத்திரையில் சிவ பக்தர்கள் ஒன்று கூடி சென்று, கங்கை நதியில் இருந்து புனித நீரை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதே இதன் முக்கிய நிகழ்வாகும். 

இந்த நிகழ்விற்க்காக சிவ பக்தர்கள் அனைவரும் காவி ஆடையை அணிந்து கொண்டு, மூங்கிலால் ஆன கம்புடன் புனித நீரை கூடத்தை கட்டி தோள்களில் தொங்க விட்டு பாதயாத்திரையாக நடந்தே புனித தலங்களுக்கு சென்று சிவ பெருமானுக்கு நீரை கொண்டுவருவார்கள். 

அது போல் ஹரித்துவாரில் கன்வார் யாத்திரையின் போது இளைஞர் ஒருவர் அவரது தாயை ஒரு தோளிலும், மற்றொரு தோளில் கங்கை நீரையும் சுமந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியது. 

11 விநாடிகள் கொண்ட அந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து 42 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களும், 1800-க்கும் அதிகமான லைக்குகளையும் குவித்து, வீடியோவை பார்த்தவர்கள் வாலிபரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yatra carries mother man shoulder


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->