பெங்களூரில் பரபரப்பு.! முதியவரை ஸ்கூட்டரில் இழுத்துச் சென்ற வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் மாகடி ரோடு அருகே ஒசஹள்ளி மெட்ரோ ரெயில் நிலைய பகுதியில் கடந்த 10-ந் தேதி கார் மீது ஒரு ஸ்கூட்டர் மோதியது. இது குறித்து கார் ஓட்டுனரான முத்தப்பா கேட்டதால், அவரிடம் ஸ்கூட்டர் ஓட்டி வந்த வாலிபர் சாகில் தகராறு செய்தார். 

அதன் பின்னர், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி செல்வதற்கு முயன்றுள்ளார். அப்போது, கார் ஓட்டுநர் முத்தப்பா ஸ்கூட்டரின் பின்புறம் பிடித்து கொண்டார். இருப்பினும் ஸ்கூட்டரை நிறுத்தாமல் ஒரு கிலோ மீட்டர் தூரம் முத்தப்பாவையும் சேர்த்து சாகில் இழுத்து சென்றுள்ளார். 

இதுதொடர்பான வீடியோ காட்சி வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், சாகில் மீது விஜயநகர் போக்குவரத்து காவல் நிலையத்திலும், கோவிந்தராஜநகர் காவல் நிலையத்திலும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஸ்கூட்டரில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்றதால் படுகாயம் அடைந்த முத்தப்பா அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதால், முத்தப்பா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவர்கள் தெரிவித்ததாவது, "அவரது எலும்புகள் எதுவும் பாதிக்கப்படாமல், தோல் பகுதிகளில் மட்டுமே அதிக காயம் அடைந்திருந்ததால், வீட்டிலிருந்து ஓய்வெடுப்பதற்கு முத்தப்பாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதற்கு இடையே, கைதான சாகிலை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருந்தனர். ஆனால், அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கு முன்வராததால், பதினான்கு நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சாகில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man arrested for old man dragged on scooter


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->