ச்சீ! ஏன் இப்படி?விரக்தியில் இளைஞர் தற்கொலை...!!! சம்பளம் எவ்வளவு எனக் கேட்டு தொல்லை கொடுத்த உறவினர்கள்..!
young man commits suicide despair Relatives harassed him by asking how much his salary was
மராட்டிய மாநிலம், புனே மாவட்டம் பிம்ரி சின்சவத் பகுதியை சேர்ந்தவர், 20 வயதான தேஜா பஜிராவ் என்ற இளைஞர். இவர் ஹிஜ்வாடி பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் ஆபிஸ் பாய் ( office boy) ஆக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் தேஜா பஜிராவிடம், உன் சம்பளம் எவ்வளவு? என கேட்டு உறவினர்கள் அவ்வப்போது தொல்லை கொடுத்துள்ளனர்.இதில் முக்கிய உறவினர்களான 25 வயதான நீலீஷ் சஞ்சய் என்பவரும், அவரது சகோதரர் 23 வயதான மங்கேஷ் ஆகிய இருவரும் சம்பளம் எவ்வளவு ? என கேட்டு தேஜாவை அடிக்கடி மனவுளைச்சல் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே, சம்பளம் தொடர்பாக உறவினர்களின் கேள்வி மற்றொரு தொல்லையால் விரக்தியடைந்த தேஜா பஜிராவ் கடந்த சில நாட்களுக்குமுன் தான் பணியாற்றும் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் 6வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்தத் தற்கொலை செய்வதற்குமுன், தன் தற்கொலைக்கு காரணம் சஞ்சய், மங்கேஷ் என்று தெரிவித்து வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள் இன்று தற்கொலைக்கு தூண்டியதாக சஞ்சய் மற்றும் மங்கேசை கைது செய்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
English Summary
young man commits suicide despair Relatives harassed him by asking how much his salary was