தெலுங்கானா : தண்டவாளத்தில் வீடியோ எடுத்த வாலிபர் - ரெயில் மோதி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தண்டவாளத்தில் வீடியோ எடுத்த வாலிபர் - ரெயில் மோதி உயிரிழப்பு.!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத், ஸ்ரீ ரமணாகர் பகுதியை சேர்ந்தவர் முகமது சாதிக் மகன் முகமது சர்ப்ராஸ். இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு உள்ளூர் மதரஸா ஒன்றில் இஸ்லாமிய கல்வி படித்து வந்தார். 

இந்த நிலையில், சர்ப்ராஸ் நேற்று காலை தன்னுடன் படிக்கும் நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து சனாத் நகர் ரெயில் நிலையம் அருகே பாப்புகுடா பகுதிக்கு சென்றனர். அங்கு சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் நடந்து செல்வது போன்ற வீடியோ எடுக்குமாறு தன் நண்பர்களுக்கு தெரிவித்தார். 

அதன்படி சர்ப்ராஸின் நண்பர்கள் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக லிங்கம் பள்ளியில் இருந்து சனாத் நகர் நோக்கி வந்த எம்.எம்.டி.எஸ். ரெயில் முகமது சர்ப்ராஸ் மீது மோதியது. இதனால் முகமது சர்ப்ராஸ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சர்ப்ராஸ் நண்பர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சனாத் நகர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து முகமது சர்ப்ராஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

தண்டவாளத்தில் வீடியோ எடுக்கும் போது மாணவர் மீது ரெயில் மோதிய காட்சி அவரது நண்பர்கள் செல்போனில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man died for train accident in telungana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->