நாடக காதலனிடம் சிக்கிய பெண்! ஸ்க்ரூடிரைவரால் முடிந்த கொடூர சம்பவம்! - Seithipunal
Seithipunal


நாடக காதலனிடம் சிக்கிய பெண்! ஸ்க்ரூடிரைவரால் முடிந்த கொடூர சம்பவம்!

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண் ஒருவரை, சிவம்குமார் என்ற நபர் சந்தித்து பழகி வந்துள்ளார்.

இளம் பெண்ணிடம் திருமண செய்வதாக வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் தனக்கு தேவையான போதெல்லாம் அந்தப் பெண்ணை சிவம்குமார் உறவுக்கு அழைத்துள்ளார். 

அதன் படி அந்த பெண்ணும் திருமண ஆசையில் சிவகுமாருடன் உடலுறவுக்கு ஒத்துழைத்துள்ளார். இதற்கிடையே, உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் மூலமாக, அந்தப் பெண் சிவம்குமார் ஏற்கனவே திருமணமானவர் என்றும், தன்னை திருமணம் செய்ய வாய்ப்பே இல்லை என்பதையும் தாமதமாகவே அறிந்துள்ளார்.

இதையடுத்து சிவம்குமார் அந்த பெண்ணை வழக்கம்போல் தன்னுடைய தேவைக்கு நெருங்கியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்புத் தெரிவித்ததனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சிவம் குமார் அந்தப் பெண்ணை கண்மூடித்தனமாய் தாக்கியுள்ளார்.

பின்னர் ஸ்க்ரூ டிரைவர் கொண்டு பெண்ணின் கழுத்தில் சரமாரியாக குத்தி கொன்றுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் அந்தப் பெண் அலறியிருக்கிறார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். இதைப்பார்த்த சிவம் குமார் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் உயிருக்கு போராடிய பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த எழுத்துபூர்வமான புகாரின் படி, சிவம் குமாரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man kill woman in hariyana for harassment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->