சுற்றலா பயணிகளே உஷார்! நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞர்! - Seithipunal
Seithipunal


புனே : நீர்வீழ்ச்சியில் குதித்து நீச்சல் அடிக்கும் போது இளைஞர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமடை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் வட மாநிலங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.

இந்த நிலையில் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தம்ஷினி காட் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குதித்து நீச்சல் அடிக்கும் போது அடித்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த இளைஞன் தனது ஜிம்மில் இருந்து 32 பேருடன் சேர்ந்து நீர்வீழ்ச்சிக்கு குளிக்க வந்ததாக கூறப்படுகிறது. நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருக்கும் போது இளைஞர் திடீரென அடிச்சு செல்லப்பட்டு காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இரண்டு நாட்கள் ஆகியும் இளைஞரின் உடல் இன்னும் கிடைக்கவில்லை என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நீர்வீழ்ச்சியில் குளிர்த்து கொண்டிருக்கும் போது இளைஞர் அடித்து செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man swept away in the waterfall


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->