ஓட்டலில் வெடிகுண்டு இருப்பதாக சொல்லி ரூ.5 கோடி பணம் கேட்ட மர்ம நபர் கைது..!  - Seithipunal
Seithipunal


மும்பையில் பிரபல ஓட்டல் ஒன்றில் நான்கு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக தொலைபேசி வழியே மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். 

அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய வேண்டுமானால் ரூ.5 கோடி தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஓட்டல் நிர்வாகம் போலீசிற்கு தகவல் தெரிவித்துள்ளது. இதை அறிந்த போலீசார் உடனடியாக ஓட்டலின் ஒவ்வொரு பகுதியிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

அந்த சோதனையில் சந்தேகப்படும்படியாக எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இதுகுறித்து சாஹர் காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. 

இந்த விசாரணையில், சம்பவத்திற்கு தொடர்புடைய இரண்டு பேரை குஜராத்தின் வாபி நகரில் வைத்து போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் மும்பை நகருக்கு இன்று கொண்டு வரப்பட்ட நிலையில், உள்ளூர் கோர்ட்டு ஒன்றில்  இருவரும் நாளை ஆஜர் செய்யப்படவுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for bomb threat in hotel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->