காணமால் போன குழந்தைகளின் தகவல்களைத் தருவதாக மோசடி - செல்போனால் சிக்கிய பட்டதாரி இளைஞர்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள வஜிராபாத் பகுதியில் சிறுமி ஒருவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் படி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், காணாமல் போன சிறுமி குடும்பத்தை ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிறுமி குறித்த தகவல் தனக்குத் தெரியும் என்றும், அதுகுறித்த தகவல் தர 8,000 ரூபாய் வேண்டும் என்று கூறி அதற்காக யுபிஐ கணக்கின் க்யூ ஆர் கோட் குறியீட்டை அனுப்பியுள்ளார்.

இதனை நம்பிய சிறுமியின் குடும்பத்தினர், அந்த கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளனர். ஆனால், அந்த நபரிடமிருந்து எந்த தகவலும் வராததால், சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர்.

அதன் அடிப்படையில் போலீஸார், சிறுமி குடும்பத்தினர் பணம் அனுப்பிய க்யூ ஆர் கோட் குறியூட்டை வைத்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் உத்தரப்பிரதேசம் மாநிலம் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் சவுகான் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து டெல்லி போலீஸார் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து, உத்தரப்பிரதேசம் சென்று அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸார் தெரிவித்ததாவது, "கைது செய்யப்பட்டுள்ள ஷியாம் சுந்தர் சவுகான், பட்டதாரி. 

இதுவரை காணாமல் போன குழந்தைகள் தொடர்பான தகவல்களைத் தருவதாகக் கூறி 900 குடும்பங்களை ஏமாற்றியுள்ளார். காணாமல் போன குழந்தைகளின் குடும்ப விவரங்களை இணையதளத்திலிருந்து எடுத்துள்ளார்.

இந்த தகவலை வைத்து பாதிக்கப்பட்டவர்களிடம் தொலைபேசியில் பேசி 2,000 முதல் 40,000 ரூபாய் வரை தனது க்யூ ஆர் கோட்டிற்கு பணம் அனுப்பச் சொல்லி ஏமாற்றியுள்ளார். இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்ன்றுத் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for money fraud in delhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->