மகாராஷ்டிரா : ஆம்புலன்ஸ் கிடைக்காததால் வாலிபரின் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற அவலம்.!  - Seithipunal
Seithipunal


ஆம்புலன்ஸ் கிடைக்காததால் வாலிபரின் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற அவலம்.! 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டம் குருஷ்னர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் காசநோயால் பாதிக்கப்பட்டு நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து வாலிபரின் உடலை நகர்பகுதியில் இருந்து தொலைவில் உள்ள கிராமத்துக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி எதுவும் கிடைக்கவில்லை. இதனால், வாலிபரின் குடும்பத்தினர் அவரது உடலை இருசக்கர வாகனத்தின் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்தனர். 

அதன் படி அவர்கள் இருசக்கர வாகனத்தில் மரக்கட்டிலுடன் சேர்த்து வாலிபர் உடலை கட்டி சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர். இதனை பார்த்த பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

இது குறித்து மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "உயிரிழந்த வாலிபரின் உடலை எடுத்து செல்ல வாலிபரின் குடும்பத்தினர் நகராட்சி நிர்வாகம் அல்லது சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ளவில்லை. தனியார் மருத்துவமனையில் இருந்து இருசக்கரவாகனத்தில் உடல் எடுத்து செல்லப்படுவதை ரோந்து பணியில் இருந்த போலீசார் கவனித்து உள்ளனர். 

உடனே அவர்கள் சம்பவம் குறித்து தாலுகா சுகாதாரத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் மூலம் வாலிபரின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை அனைத்தும் செய்யப்பட்ட பிறகு வாலிபரின் உடல் அவரது சொந்த ஊருக்கு இறுதி சடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth body carried on two wheelar for ambulance not available in maharastra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->