செல்போன் திருட்டு - இளைஞரை ரவுண்டு கட்டி வெளுத்த கிராமத்தினர் - நொடியில் நடந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் உள்ள சிவசாகர் மாவட்டம் பகன் கிராமத்தில் ஒரு வீட்டில் நேற்று செல்போன் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே இந்த திருட்டு சம்பவத்தில் பலு கொவலா, டகு ஒரங் உள்ளிட்ட இளைஞர்கள் ஈடுபட்டதாக தகவல் பரவியது. 

அதன் படி அந்த இரு இளைஞர்களையும் கிராமத்தினர் சிறைபிடித்து கடுமையாக தாக்கினர். இந்தத் தாக்குதலில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் இரு இளைஞர்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த நிலையில், கிராம மக்கள் கடுமையாக தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞர் பலு கொவலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth died village peoples attack for mobile steal in assam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->