என் தங்கச்சி கூட பேசுவியா ? இளைஞரை கொன்ற அண்ணன்..!
Youth Murder His neighbour In Delhi
மகளுடன் பேசுவதால் பக்கத்து வீட்டில் இளைஞனை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லியில் பகுதியை சேர்ந்தவர் சல்மான். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் தனது அண்டை வீட்டில் வசித்து வரும் ஹீனா என்பவருடன் நட்பாக பழகி வந்தார்.
இது அந்தப் பெண்ணின் குடும்பத்தாருக்கு பிடிக்காததால் அவருடன் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல, சல்மானின் மனைவியும் அந்த பெண்ணுடன் பேச கூடாது என கண்டித்துள்ளார். ஆனால், இதை கண்டுகொள்ளாத இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர் .
சல்மானின் குடும்பத்தினர் அங்கிருந்து வேறு பகுதிக்கு குடியேறிவிட்டனர். இருப்பினும் இருவரும் தங்கள் நாட்கள் தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி ஹீனா பேசுவதற்காக சல்மானை அழைத்து உள்ளார் இருவரும் அவர்கள் வீட்டின் அருகே நின்று பேசிக் கொண்டிருப்பதை கண்ட அவரது குடும்பத்தினர் சல்மானை கடுமையாக தாக்கியுள்ளனர்.
மேலும், ஹீனாவின் சகோதரர் ஃப்ரீதீன் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சல்மானின் தாய் சத்தம் போட்டுள்ளார். இதனால் பயந்து போன அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக சல்மானை மீட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் மகளுடன் பேசியதற்காக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Youth Murder His neighbour In Delhi